தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!
அக்டோபர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன் தினம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,675க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து வார தொடக்கமான இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.13,675க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.11,235க்கும், ஒரு சவரன் ரூ89,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




