விஜய் பரப்புரைக்காக எல்லாரும் அவங்க வேலைய விடணுமா? – நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா
தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா செய்தியாளர்களிடம் பேசியதாவது, சாலை மறியல் எல்லாம் இல்லை. நாங்கள் எங்களுடைய இறுதி கட்ட பரப்புரையை செய்து வருகிறோம். காவல்துறை அரை மணிநேரத்திற்கு முன்பே முதல்வர் விஜய் இங்கு வருகிறார் போகாதீர்கள் என்றார்கள். நாங்கள் 10 நிமிடத்தில் போயிருப்போம். விஜய் மட்டும் அரசியல் கட்சி நடத்தவில்லை.
இவர் பரப்புரைக்காக எல்லோரும் அவர்கள் வேலையை விட வேண்டும். தாராபுரம் தேர்தலே ஜனநாயகத்திற்கு விரோதமானது தான். வெற்றி பெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-வை விலைக்கு வாங்கி இடைத்தேர்தல் நடத்துகிறீர்கள். வெட்கமாக இல்லையா? காவல்துறை ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறது என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




