முதலமைச்சர் விஜய்க்கு நீங்கள் மரண அடி கொடுக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 6ஆம் தேதி இதற்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “உழைப்பையும், உண்மையையும் மதிக்கும் தாராபுரம் மக்களாகிய உங்களிடம் வாக்குக் கேட்க மட்டுமல்ல, நியாயம் கேட்டு வந்திருக்கிறேன். ஒருவரிடம் பெட்டி பெட்டியாக பணத்தை திணித்த காரணத்தால், மக்களான உங்கள் மீது இந்த இடைத் தேர்தல் திணிக்கப்பட்டிருக்கிறது. பெட்டியை கொடுத்ததும், வாங்கியதும் யார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
நீங்கள் கட்டிய வரிப் பணத்தால் இந்த இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐந்து மாதத்திற்கு முன் நீங்கள் செலுத்திய வாக்கை செல்லாத வாக்காக மாற்றிவிட்டனர். அந்த மக்கள் விரோத துரோகிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அதுமட்டுமின்றி விலை போகாத ஒருவரை, உங்களுக்கு விசுவாசமான ஒருவரையும் வெற்றி பெறவைக்க உங்களிடத்தில் நான் வந்திருக்கிறேன்.
நமது வேட்பாளர் உங்களிடம் வாங்கும் வாக்குகளை வேறு இடத்தில் விற்கமாட்டார். எப்போது சட்டமன்ற உறுப்பினர் இறந்தால் தான் அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும். ஆனால், இந்த இடைத் தேர்தல் அப்படி வந்ததில்லை. இந்த இடைத் தேர்தல் ஜனநாயகத்தை சாகடித்ததால் வந்திருக்கிறது. உங்கள் வாக்குகளை விற்ற ஒரு வேட்பாளர், அதனை விலை பேசி வாங்கிய ஒரு கட்சிக்கு யாராவது வாக்களிப்பார்கள்.
118 இடங்களைக்கூட பெற முடியாத மக்கள் ஆதரவற்ற ஒரு முதல்வர், தன் சுயநலத்திற்காக மக்கள் தீர்ப்பை விலைக்கு வாங்க வரவழைத்திருக்கும் தேர்தல்தான் இந்த இடைத் தேர்தல். ஆட்சி செய்வது எப்படி என கற்றுக்கொள்ள முயற்சி செய்வார் என பார்த்தால், அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிக்கொண்டிருக்கிறார்.
நம் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவைப் பதவி கொடுத்து ஆதரவு வாங்கினார். ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது எனும் எண்ணத்தில் இடதுசாரிகளும் ஆதரவு தந்தனர். அதன்பிறகும் யாரையும் நம்பாமல், பல இடங்களுக்கு சோஃபா அனுப்பினார். அப்படி அதிமுகவின் பாதி எம்.எல்.ஏ.க்களை வாங்கினார். அதுபோதாது என அதிமுகவை உடைத்து, பல எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, தன் கட்சியில் இணைத்துக் கொண்டு இந்த இடைத் தேர்தலை வரவழைத்துள்ளார்.
ஆணவத்தின் உச்சத்தில் இருந்து தமிழ்நாடு மக்களின் வாக்குரிமையை கொச்சைப்படுத்தும் முதலமைச்சர் விஜய்க்கு தாராபுரம் மக்களாகிய நீங்கள் கொடுக்கக்கூடிய அடி மறக்கமுடியாத மரண அடியாக இருக்க வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் இதே வேலையாக இறங்கிவிடுவார்கள்.
முதலமைச்சர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, மக்கள் முன் நடித்துவருகிறார். சமீபத்தில் பிரச்சாரத்தில் வேட்பாளரையும் நடிகராக மாற்றிக்கொண்டிருக்கிறார். பிரச்சார மேடையில் மைக் கிடைத்தால் போதுமென தான் மனப்பாடம் செய்ததை கத்துகிறார். பிரச்சாரம் மட்டுமின்றி, சட்டமன்றத்திலும் அவர் கத்தத்தான் செய்வார். ஆனால் மீடியா மைக்கை பார்த்தால் மட்டும் அலர்ஜி.
மேடையிலும், சட்டமன்றத்தில் கத்துகிறீர்களே, மீடியா மைக் முன்னாடி கொஞ்சம் பேசக்கூடாதா? மேடூரில் அவரிடம் கூலிங்கிளாஸ் வாங்கிய பாட்டி, அவர் காலை உணவு பரிமாறிய சின்ன சிறுமி அவர்கள் எல்லாம் கூட தைரியமாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்கள். கேள்விகளுக்கு பதில் சொன்னார்கள். ஆனால், இந்த ரீல்ஸ் சி.எம். மட்டும் மீடியா என்றாலே அஞ்சுகிறார். இந்த லட்சணத்தில் என்னை பார்த்து ‘வாயை திறங்க ஸ்டாலின் சார்….’ என காட்டு கத்து கத்துகிறார்.
நானும் கத்துகிறேன், ‘சி.எம் சார்… ப்ரோ…. தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் ஏன் சார் வாயைத் திறக்கவில்லை. என்ன சார் பயம்? பாஜக என்றால் அவ்வளவு பயமா சி.எம். சார்? தாராபுர பிரச்சாரத்தில் தவெக, பாஜகவின் கிளை என்பதை அவரே ஒப்புக்கொண்டார்.
மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டிய சட்டமன்றத்தின் மாண்பையும் கெடுத்து, கண்ட கண்ட சைகைகளை காட்டி கெடுத்திவிட்டார். மக்கள் உங்களை பார்த்து மாண்புமிகு முதலமைச்சர் என அழைக்கும்படி நடந்துக்கொள்ள வேண்டும்” என பேசி ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





