திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு உள்ள கடற்கரையில் இருந்து திடீரென சுமார் 100 அடி வரை கடல் நீர் உள்வாங்கியுள்ளது. இதன் காரணமாகக் கடலுக்குள் இருந்த பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்ததுடன், அப்பகுதியில் வித்தியாசமான சூழல் நிலவியது.
கடல் நீர் உள்வாங்கியதால் அங்கு வெளிப்பட்ட சிறிய வகை சங்குகள், சிப்பிகள் உள்ளிட்ட பொருட்களைக் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் எடுத்துச் சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




