--- --:--:-- --

தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?

5

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அதுவும் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது. நேற்று முன் தினம் மட்டுமே தங்கம் விலை 2 முறை சரிவை கண்டது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.13,640க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

 

இந்த நிலையில் மாத கடைசி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,710க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11480க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon