குறைந்தது தங்கம் விலை..!
செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.அந்த வகையில், நேற்று முன் தினம் செப்டம்பர் 19ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,285க்கும் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,280க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து வார தொடக்கமான இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,270க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.12,040க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.96,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




