--- --:--:-- --

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

1

மிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்று கடைசி நாள் என்பதால், இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகிறது. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தாராபுரம், மதுராந்தகம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி, 16ஆம் தேதி நிறைவடைந்தது. வேட்புமனு பரிசீலனை கடந்த 17ஆம் தேதி நிறைவடைந்தன.

 

 

தாராபுரம் தொகுதியில் 22 வேட்புமனுக்களும், மதுராந்தகம் தொகுதியில் 28 வேட்புமனுக்களும், தட்டாஞ்சாவடியில் 11 வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு இன்று கடைசி நாள் என்பதால், மனுக்களைத் திரும்பப் பெற விரும்பும் வேட்பாளர்கள் மாலைக்குள் திரும்பப் பெறலாம்.

 

 

கால அவகாசம் நிறைவடைந்ததும், மூன்று தொகுதிகளிலும் தேர்தலில் இறுதியாகப் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும், சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் மாலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளன. தமிழ்நாட்டில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என 5 முனை போட்டி நிலவும் நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon