டெல்லியில் பிரதமர் மோடி – புதின் சந்திப்பு; திருக்குறள் நூலை பரிசளித்த மோடி
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்தார். இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி வரவேற்று, அவருக்கு திருக்குறள் நூலை பரிசாக வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா – ரஷ்யா இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி மற்றும் புதின் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





