--- --:--:-- --

விநாயகர் சதுர்த்தி: எழும்பூர் டூ திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

01

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கும் வகையில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. திங்கட்கிழமை பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் வார இறுதி நாட்கள் உடன் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

 

இதனிடையே சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06151) செப்டம்பர் 12ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

 

 

மறுமார்க்கத்தில் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06152) செப்டம்பர் 14ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, ஸ்ரீரங்கம், திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

 

பெட்டி வசதிகள்: ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டிகள், 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என மொத்தம் 23 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 11ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon