முதலமைச்சர் விஜயின் முதல் வெளிநாட்டு பயணம்..!
தமிழகத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வரும் 4ம் தேதி தைவான் நாட்டிற்கும், முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி பிரிட்டனுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தென் மாநிலங்களில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழகம் மற்றும் ஆந்திரா இடையில் கடும் போட்டி நிலவுகிறது. எனவே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.
‘செமிகண்டக்டர், ஏ.ஐ., சிப்’ உள்ளிட்ட தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும், ‘செமிகான்’ மாநாடு, இந்த வாரம் தைவானில் நடக்கிறது.
அந்நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழு, தைவானில் வரும் 4ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். முதல்வர் விஜய், தொழில் துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர், வரும் 10ம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளனர்.
அக்குழுவினர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், 16ம் தேதி வரை சுற்றுப் பயணம் செய்து, அந்நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளனர்.
கடந்த மே மாதம், த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின், முதல் முறையாக அமைச்சர் கீர்த்தனா, தென்கொரியா சென்று, கப்பல் கட்டும் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். முதல்வராக பொறுப்பேற்ற பின், விஜய் முதல் முறையாக வெளிநாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார் என, தொழில்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




