--- --:--:-- --

திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திடீர் விலகல்..!

01

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் நீக்கப்பட்ட நிலையில், இந்த முடிவை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்புகிறேன்.

 

 

மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கியதற்கு நன்றி. திமுகவில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் எனக்கு கொடுத்த மனக்கசப்பால், இனியும் திமுக தொடர முடியாதததால் விலகுகிறேன். இப்போதைக்கு எந்த இயக்கத்திற்கும் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை.

 

 

தற்போதைக்கு வேறு இயக்கத்திற்கு செல்ல முயற்சிக்கவில்லை. முன்னாள் முத்துசாமி மீது எவ்வித குற்றச்சாட்டையும் கூறவில்லை. இறந்தகாலத்தை குறைகூறாமல் நிகழ்காலத்தை தொடர விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon