--- --:--:-- --

தாய் மாமனாக விஜய் என்ன சொல்லப் போகிறார்? – சீமான்

11

கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி தருகிறது. கோடை கல்லூரி மாணவர் அமுதனின் படுகொலையை குழு மோதல் எனக் கூறி மூடி மறைப்பதா? ஒழுக்கங்களை போதிக்கக் கூடிய கல்விக் கூடங்களில் பகைமை, வெறுப்பு, போதைப் பழக்கம் உருவாகி உயிரை போக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் புழக்கம் என்பதை மறைத்து மாணவர்களின் தகராறு என வழக்கு கோணத்தை மாற்ற முயற்சி செய்கின்றனர்.

 

 

த.வெ.க அரசின் போக்கு அநீதிக்கு துணைபோகும் துரோகம் இல்லையா? இறந்து போன 19 வயது பிள்ளையின் மரணத்துக்கு தாய் மாமனாக விஜய் என்ன சொல்லப் போகிறார்? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும், கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon