தொழில்துறை சார்ந்த புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிற் பயிற்சி நிலையக் கட்டடங்கள் மற்றும் விடுதி கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் 5 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திண்டிவனத்தில் 4 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடங்களையும், பயிற்சியாளர் விடுதி கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார்.
அதேபோல நீலகிரி, கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள தொழில்துறை சார்ந்த கட்டடங்களையும் முதலமைச்சர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




