விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே திருட வந்த வீட்டில் மீன் குழம்பில் இருந்த மீன்களை கொள்ளையர்கள் ருசி பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சிறுவாடி கிராமத்தில் வசித்து வரும் அரசுப் பொறியாளர் செந்தில்குமார் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் திருட சென்ற இரண்டு நபர்கள் செந்தில்குமார் வீட்டின் பின்புறக் கதவு வழியாக உள்ளே சென்றுள்ளனர். செந்தில்குமார் பையில் எதுவும் இல்லாத நிலையில் அவரின் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பணம் மற்றும் 3 செல்போன்களையும் திருடி சென்றுள்ளனர்.
மேலும் வீட்டில் வைத்திருந்த மீன் குழம்பில் இருந்த மீன்களை சாப்பிட்டு விட்டு அங்கு வைத்திருந்த பாலையும் குடித்து விட்டு சென்றனர். சத்தம் கேட்டு செந்தில்குமாரின் மகன் எழுந்ததையொட்டி அங்கிருந்த இரண்டு திருடர்களும் அங்கிருந்து தப்பினார்.