--- --:--:-- --

சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்: ரூ.7,000 கோடி கடன் வழங்க முடிவு

5

மிழக பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வு கூட்டம் தினமும் நடைபெற்று வருகிறது. சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சிங்கப் பெண்கள் மேம்பாட்டு திட்டம்’ என்ற பெயரில் இளம்பெண்கள், நலிவடைந்த சமூகத்தினர் தொழில் தொடங்குவதற்காக, தொழில் முனைவோர் கடன்களை வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்து உள்ளது.

 

 

இதற்காக இந்த ஆண்டில் சுய உதவி குழுக்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி, சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7,000 கோடி கடன் வழங்கும் அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon