--- --:--:-- --

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் – ஒப்பந்த அறிவிப்பு வெளியீடு

4

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப். 15-ம் தேதி தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் 1 கிராம் தங்கம் ரூ.5,725-க்கு கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இன்று முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை வாங்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்கிறது. த்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள்.

 

Leave a Reply

Right Menu Icon