தனியார் பள்ளிகள் கட்டண விபரங்களை வெளியிடக் கோரும் வழக்கு: ஐகோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு
தனியார் பள்ளிகள் தங்களின் கல்வி கட்டண விவரங்களை பள்ளி வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகைகளில் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது, தனியார் பள்ளிகளுக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) பொருந்தாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, தகவல் ஆணையத்தின் உத்தரவின்படியே மாணவர்களின் நலன் கருதி கல்வி கட்டண விவரங்களைப் பொதுவெளியில் அறிவிப்பு பலகையில் வெளியிட உத்தரவிடப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கின் இறுதித் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது





