தனது மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் – அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்
தனது மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார்” என உறுதி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளதாகவும் விளக்கமளித்தார். தவெக அரசு அமைந்தபிறகு, முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. அமைச்சர்கள் பதவியேற்பு விழாவின்போது தமிழ்த்தாய் வாழ்த்து 3-ஆவதாக பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அடுத்ததாக தேசிய கீதம் பாடப்பட்டது. பின்னர், உரையாற்றிய பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், அறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் உரையை தொடங்கினார். மேலும், பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையாற்றினார்.
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், விசில் புரட்சியின் மூலம் முதலமைச்சர் விஜய் இமாலய வெற்றி பெற்றுள்ளதாக பாராட்டு தெரிவித்தார். தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது எனவும், மத்திய அரசிடம் உரிய நிதிப் பகிர்வைப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் ஆளுநர் அர்லேகர் குறிப்பிட்டார். மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திய பிறகே தமிழ்நாடு அரசு சமூக நீதி கணக்காய்வை நடத்தும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணைகளைக் கட்ட தமிழ்நாடு அனுமதிக்காது எனவும் ஆளுநர் அர்லேகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “”இன்று ஆளுநர் உரையிலே புதிய திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு எந்த புதிய திட்டமும் இல்லை. ஆனால் முதலமைச்சர் டெல்லிக்கு சென்று வந்தவர் விஷயம் செய்திகளில் வெளியிட்டது. அப்போது குறிப்பிடப்பட்டவைதான் இந்த ஆளுநர் உரையில் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் வெள்ளையர் வெளியிட்டார். அந்த விவரமும் ஆளுநர் உரையிலிருந்து இருந்தது” என்றார்.
இன்று தமிழக வெற்றி கழகம் ஆட்சி பெற்ற பிறகு மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் போதைப்பொருள் தடுக்கப்படும் என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இன்று நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.





