முதலமைச்சரின் முதல் 3 முக்கிய திட்டங்கள்..!
நிதி நெருக்கடி இருந்தாலும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் விஜய் பிறப்பித்த முதல் மூன்று அரசாணைகள் குறித்து ஆளுநர் விவரித்தார்.
இருமாதங்களுக்கு 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் (அரசுக்கு 1,730 கோடி ரூபாய் கூடுதல் செலவு) மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 354 கோடி ரூபாய் செலவில், 2,545 புதிய பணியிடங்கள், 319 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், 101 இருசக்கர வாகனங்கள் மற்றும் ட்ரோன் கருவிகளுடன் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ (Singapan Special Task Force) உருவாக்கப்பட்டுள்ளது





