ஊட்டியில் சிங்கப்பெண்கள்..!
நீலகிரி மாவட்டத்திலும் இறங்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை. 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 பெண் காவலர்கள் கொண்ட இந்த படையினர், தினமும் 2 ஷிப்ட் முறையில் நகரின் முக்கிய பகுதிகளில் ரோந்தில் ஈடுபடுகின்றனர்.
ஊட்டியில் பள்ளிகள், கல்லூரிகள், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.






