--- --:--:-- --

காங்கிரஸிடம் தமிழர்களின் உரிமையை த.வெ.க அடகு வைத்துவிட்டது: பா.ஜ.க. கண்டனம்

9

காங்கிரஸிடம் தமிழர்களின் உரிமையை த.வெ.க அடகு வைத்துவிட்டது: பா.ஜ.க. கண்டனம்
காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பூசலை மறைப்பதற்காக, மேகதாது விவகாரத்தை திட்டமிட்ட ரீதியில் ஊதிப் பெரிதாக்கி இரு மாநிலங்களுக்கிடையே கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பதற்றத்தை உருவாக்க முயல்கிறார்.

 

இந்த விவகாரம் தெரிந்தும், கர்நாடக காங்கிரஸ் அரசை தமிழக முதலமைச்சர் ஜோஸப் விஜய் இதுவரை கண்டிக்காமல் மௌனம் காப்பது தமிழக மக்களுக்கு இழைக்கும் பெரும் துரோகம்.மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் எனக் கூறும் காங்கிரஸ் கட்சியுடனான உறவைத் துண்டிக்கத் தவறிய முதலமைச்சர் விஜய், மாறாக அக்கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் தாரை வார்த்துள்ளார்.

 

காங்கிரஸ் தயவில் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் த.வெ.க-வின் பதவி வெறியே இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. தமிழர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் காங்கிரஸ் கட்சியிடம் த.வெ.க. அடகு வைத்திருப்பது வெட்கக்கேடானது – பாரதிய ஜனதா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

Leave a Reply

Right Menu Icon