தேர்தல் பிரசார நிலையில் இருந்து விஜய் வெளியே வர வேண்டும்
தேர்தல் பிரசார நிலையில் இருந்து வெளியே வாருங்கள் என முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். தல்வர் விஜய், திருச்சிக்கு சென்று பேசினார். அவர் தேர்தல் பிரசார நிலையில் இருந்து வெளியே வர வேண்டும். முதல்வர் ஆகிவிட்டார். மக்கள் உங்களுக்கு வாய்ப்புகளையும் வாழ்த்துகளையும் கொடுத்துள்ளார்கள்.
உடனே, போர்க்கால அடிப்படையில் பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நான் கோயம்பேடு வழியாகத்தான் வந்தேன். கார் ஏற்றி, இலங்கை பெண் கொல்லப்பட்டிருக்கிறார். இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. 6 மாதம் எதிர்க்கட்சிகள் அமைதியாக இருப்பதாகச் சொன்னார்கள் என்று கூறுகிறார். எதிர்க்கட்சிகள் சொல்லத்தான் செய்வார்கள் என்றார்.





