லஞ்சம் கேட்ட வட்டாச்சியர் எரித்துக் கொடூர கொலை
தெலுங்கானாவில் பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகம் சென்றுள்ளார்.
அப்போது வட்டாட்சியர் விஜயா ரெட்டி பத்திரப்பதிவு செய்ய சுரேஷிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பல நாட்கள் கோரிக்கை விடுத்தும் பத்திர பதிவு செய்யப்படாததால் ஆத்திரத்தில் இருந்த சுரேஷ் தான் கொண்டுவந்த பெட்ரோலை வட்டாட்சியர் மீது ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். இதனையடுத்து வட்டாட்சியர் அலறல் சத்தம் கேட்டு ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது எரிந்த நிலையில் விஜயா ரெட்டி சடலமாக கிடந்தார்.

இதனையடுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓட முயற்சித்த சுரேஷை ஊழியர்கள் மடக்கிப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பட்டப்பகலில் வட்டாட்சியர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




