இன்னும் 10 நாட்களுக்குள் அயோத்தி தீர்ப்பு?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற இருப்பதால் அயோத்தி வழக்கில் வரும் 13 ஆம் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகள் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 16 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 

இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் உள்ளிட்ட அமர்வில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு இருதரப்பு வாதங்களும் கடந்த 16 ஆம் தேதி முடிவடைந்தன. இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17 ஆம் தேதி ஓய்வு பெற இருக்கிறார்.

 

இதனால் வரும் 13ஆம் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீர்ப்பு தேதி நெருங்கி வர இருப்பதால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply