வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நபர் மர்மமான முறையில் மரணம்

அரியலூர் அருகே விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நபர் உயிரிழந்ததையடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பகுதியை சேர்ந்த முருகானந்தம் வெளிநாட்டில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.

 

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்த முருகானந்தத்திற்கு அவரது வீட்டின் அருகே வசித்து வரும் பாலமுருகன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகனின் மனைவி சித்ரா முருகானந்தம் மீது செந்துறை காவல் நிலையம், அரியலூர் எஸ்பி அலுவலகம், தமிழக முதல்வர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

இதுதொடர்பாக முருகானந்த் இடம் போலீசார் அடிக்கடி விசாரணை மேற்கொண்டதில் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முருகானந்தம் தமது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது இறப்பிற்கு காரணமான சித்ரா உள்ளிட்டோரை கைது செய்ய கோரி முருகானந்தத்தின் உறவினர்கள் பாலமுருகன் வீட்டின் முன்பு சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய இழப்பீடு பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சடலத்தை எடுத்துச் சென்றனர்.


Leave a Reply