--- --:--:-- --

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

13

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 8 சென்டி மீட்டர் மழையும் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் டெல்டா மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon