--- --:--:-- --

சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார்

15

திருவள்ளூர் அருகே சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக போதைப்பொருட்கள் சட்டவிரோதமாக ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் உள்ள சுங்கச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட போலீசார் முயன்றனர். ஆனால் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றதை கண்ட போலீசார் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்றுள்ளனர்.

அப்போது முன்புறம் சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது காரை சோதனையிட்டபோது ஒரு டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை கண்டறிந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு பத்து லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் செம்மரங்களை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon