வாட்ஸ் அப் தகவல் உளவு பார்த்த விவகாரம்

இந்தியாவிலுள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கொண்ட இரண்டு நாடாளுமன்ற நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

இஸ்ரேலைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனம் ஒன்று இந்திய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரது வாட்ஸ்அப் தகவல்களை உளவு பார்த்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

 

அதனடிப்படையில் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கொண்ட இரு நாடாளுமன்ற நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அடுத்ததாக வரும் 15 ஆம் தேதி கூடும் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தலைமையில் இது குறித்த விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

தகவல் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு காங்கிரஸின் சசிதரூர் தலைமை தாங்க உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து உறுப்பினர்களுக்கும் இமெயில் அனுப்பி தகவல்களை சேகரித்து வருவதாக சசி தரூர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply