சித்ரா பௌர்ணமியை தினத்தை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய 34 வயதுடைய நபர் 7-வது மலையில் இருந்து வழுக்கி விழுந்து மரணமடைந்தார். சுயநினைவு இன்றி இருந்தவரை பரிசோதனை செய்து பார்த்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரின் விபரங்கள் தெரியாததால், ஆலந்துரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.