--- --:--:-- --

பல்லாவரத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

3

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பல்லாவரத்தில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில், தலை மற்றும் முகக்தில் பலத்த காயத்துடன் ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான விசாரணையில் உயிரிழந்தவர் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஆனந்தன் என்பதும், கருத்து வேறுபாடு காரணமாக நான்கு மாதங்களாக மனைவியை பிரிந்து ஜாபர்கான்பேட்டையில் உள்ள தன்னுடைய தந்தை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது.

 

இதனையடுத்து ஆனந்தன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon