--- --:--:-- --

கேரளாவில் குழந்தைகளை ரத்தத்தில் ‘சத்தியம்’ என எழுத வைத்த தேவாலயம்

1

கேரளாவில் தேவாலயம் ஒன்றில் குழந்தைகள் ரத்தத்தால் சத்தியம் என எழுதிய நிகழ்வு குறித்து அறிக்கை அளிக்குமாறு எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியருக்கு மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் தேவாலயங்களில் ஆர்தோடக்ஸ் கிறிஸ்துவ பிரிவினர் நிர்வகிக்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து ஜாகோபைட் கிறிஸ்துவ பிரிவினர் கடந்த சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அதன் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கோத்தமங்கலம் என்ற ஊரில் உள்ள தேவாலயத்தில் ஜாகோபைட்ஸ் திருச்சபையை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் ஆள்காட்டி விரலைக் இரத்தத்தின் மூலம் சத்தியம் என வெள்ளைத்தாளில் எழுதினர்.ஜாகோபைட்ஸ் குழுவினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குழந்தைகள் ரத்தத்தில் இவ்வாறு எழுதினார்.

இது தொடர்பான செய்திகள் கேரள நாளேடுகளில் வெளியானதையடுத்து அம்மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் நிகழ்வு குறித்து அறிக்கை அளிக்குமாறு எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட காவல் உயர் அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon