--- --:--:-- --

அ.தி.மு.க வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எடுபடாது..!

7

தொகுதி சார்ந்து அதிமுக வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கோவை மேற்கு மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் நித்தியானந்தனை வெற்றி பெற வைப்பது இலக்காக கொண்டு அனைத்து நிர்வாகிகளும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

பின்னர் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் பல்வேறு மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. அப்போது ஏன் பொள்ளாச்சி தனி மாவட்ட கோரிக்கை கேட்டு பெறவில்லை. இருக்கும்போது செய்யாமல் வந்தால் செய்வேன் என்பது எப்படி தெரியும்.

 

அடுத்த முறையும் அதிமுக ஆட்சி அமைக்கப் போவதில்லை என்பது அவருக்கு தெரியும் எனவே அதிமுக தலைமை எப்படி வாக்குறுதிகள் தருகின்றார்களோ அதேபோல் அதிமுக வேட்பாளரும் வாக்குறுதி கொடுக்கின்றார். அது மக்கள் மத்தியில் எடுபடுமா என நினைக்கின்றார். அது ஒருபோதும் எடுபடாது. மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் என்றார்.

Leave a Reply

Right Menu Icon