செம்மண் குவாரி வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி எம்எல்ஏ உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அனுமதித்த அளவை தாண்டி செம்மண் எடுத்ததால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.