--- --:--:-- --

பணம் பட்டுவாடா தடுப்பு மனு தள்ளுபடி!

6

தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைச் சட்டவிரோதமாக விநியோகிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தரப்பில், பணம் பட்டுவாடாவைத் தடுக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

 

இந்த வழக்கின் விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்தின் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு முழுமையாக வழங்கி வருவதாக வாதிட்டார். மேலும், தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தில், முறைகேடுகளைத் தடுக்க மாநிலம் முழுவதும் 2,169 பறக்கும் படைகளும், 2,166 கண்காணிப்புக் குழுக்களும் தீவிரமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை உறுதி செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon