மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்படும் – தி.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின்
தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும். இதுவரை 19 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கினோம்.
15 லட்சம் பயன்பெறும் வகையில், காலை உணவு திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். 1.31 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்படும் என்று கூறினார்.





