புலிகளை காக்க பைக்கில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் தம்பதி
மேற்கு வங்கத்தை சேர்ந்த தம்பதியினர் புலிகளை அழிவிலிருந்து மீட்கும் நோக்கில் நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கொல்கத்தாவில் வசிக்கும் ரவீந்திரதாஸ் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி கொல்கத்தாவில் புலிகள் காப்பகத்தில் இருந்து தங்களின் பயணத்தை தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து வடகிழக்கு, வடக்கு, வடமேற்கு மாநிலங்கள் வழியாக தென்மாநிலங்களில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டனர். தற்போது ஒடிசா வந்திருக்கும் தம்பதியை அங்குள்ளவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பயணத்தின் போது ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள புலிகள் காப்பகங்களுக்கு சென்று பார்வையிட்டதாகவும் புலிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் ரவீந்திரதாஸ் தெரிவித்தார்.





