--- --:--:-- --

எகிறும் தங்கம் விலை..!

2

ஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் பங்குசந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மார்ச் 1ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.

 

தொடர்ந்து படிப்படியாக தங்கம் விலை குறைந்து வருவது நகை பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் நேற்று முன் தினம் ( மார்ச் 9) தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இதை தொடர்ந்து நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை தாண்டியது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,050க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,120க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

ஆனால், 18 காரட் தங்கம் விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.12,890க்கும், ஒரு சவரன் ரூ.1,03,120க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon