--- --:--:-- --

திருவாடானை நீதிமன்றத்தில் மகளிர் தின விழா: வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கல்

9

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள வழக்கறிஞர் சங்கத்தில், சர்வதேச மகளிர் தின விழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ​இந்நிகழ்விற்கு திருவாடானை நீதித்துறை நடுவர் ஆண்டனி ரிசாந்தேவ் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் சிவராமன் முன்னிலை வகித்தார். முன்னதாக வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

 

​விழாவையொட்டி, பெண் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்களுக்குப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்கறிஞர் கலா, அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜுடியோ ஏஞ்சலின் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

​அப்போது அவர்கள் பேசுகையில், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு மற்றும் சட்டத்துறையில் பெண்களுக்கான உரிமைகள் குறித்து விளக்கினர். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்குப் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ​இந்நிகழ்வில் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றக் காவலர்கள் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Right Menu Icon