புதுப்பட்டினம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியகடல் ஆமை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரை கிராமத்தில் கடலோரம் சுமார் 10 கிலோ எடையுள்ள கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
இது குறித்து கடலோர வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த அரிவகை ஆமை எப்படி இறந்தது தெரியவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இது வரைக்கும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்






