--- --:--:-- --

ஸ்டாலின் சாருக்கும் – விஜய்க்கும் நடக்கும் போர் இது – விஜய் பேச்சு

1

சேலத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் இன்று தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பங்கேற்க QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கவில்லை என்றும், அவர்கள் கண்டிப்பாக வர வேண்டாம் என பொதுச் செயலாளர் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார். சேலம் நிகழ்ச்சியின் போது மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், வேலூர் கூட்டத்தில், நிர்வாகிகள் வசதிக்காக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், வேலூர் பிரச்சார கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், “எங்க ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம். இது நிஜம். ஒரு குட்டி கதையிலிருந்து ஆரம்பிப்போம். பெரிய ஏரியா. ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஏரியா. நடுவில் முரட்டு ஜல்லி கட்டு காளை நின்றுகொண்டிருக்கிறது.

காலில் மண்ணுடன் சீறிக்கொண்டு நிற்கிறது. யாரும் பக்கத்தில் செல்ல முடியவில்லை. அந்த காளையை அடக்கி அமைதியாக்கினால் தான் அந்த இடம் இயல்பு நிலைக்கு திரும்பும். அந்த ஊரில் உள்ள சிலருக்கு மட்டும் தான் காளை அடங்கும். அவர்கள் யாரும் அங்கு இல்லை. அங்க இருந்த சிலர், ‘நாங்க பாக்காத மாடா?’ என அந்த காளையை அடக்க செல்கிறார்கள். அவர்களால் முடியவில்லை. அப்போது சிறுவன் ஒருவன் என்ட்ரி கொடுக்கிறார்.

 

அங்கிருந்தவர்கள், ‘எங்களாலேயே முடியவில்லை. நீ என்ன பண்ண போற’ என கிண்டல் செய்கிறார்கள். மறுபுறம் அந்த சிறுவன் மீது சிலர் பரிதாபப்படுகிறார்கள். இது எதையும் அந்த சிறுவன் காதில் வாங்காமல், இரண்டு கைகளையும் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஸ்டைலாக காளை அருகே செல்கிறான்.

 

காளை சிறுவனை முட்ட வரும்போது, சிறுவன் பாக்கெட்டில் இருக்கும் புல்லுகட்டை காளையிடம் காட்டுகிறான். அதை பார்த்த காளை புல்லு கட்டை சாப்பிட ஆரம்பிக்கிறது. உடனே அந்த காளையை தடவி கொடுத்து வயல் வெளியில் காளையை மேய விட்டு வருகிறான். அப்போது அடிப்பட்டு கிடந்த அனுபவசாலிகள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். வாய் இருக்கிறது என்பதற்காக நக்கல், நையாண்டியாக நச நச என பேசுகின்றனர்.

அனுபவசாலிகள் தலை குனிந்து நின்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் சிறுவனிடம், ‘எப்படி அடக்கினாய்’ என கேட்க, சிறுவன், ‘அந்த காளை பசியுடன் இருந்தது. அதன் பசியை தீர்க்க புல்லுக்கட்டை எடுத்து வந்தேன்’ என்றானாம். ஆகவே யாராக இருந்தாலும், அந்த சூழலுக்கு ஏற்றார்போல அந்த பிரச்சினையை தீர்க்கிறார் என்பது தான் விஷயம் என தெரிவித்துள்ளார்.

Right Menu Icon