--- --:--:-- --

சென்னை ஸ்டார் ஹோட்டல் குளியல் தொட்டியில் இறந்து கிடந்த பெண் வக்கீல்..!

5

சென்னை நகரின் அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இளம் பெண் வக்கீல் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் அறை எடுத்து தங்கியிருந்த வக்கீல் ரோஜா, மறுநாள் காலை குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் உடலில் ஆடையின்றி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

 

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தேனாம்பேட்டை போலீஸ் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் ரோஜா என்பதும், அவர் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வந்ததும் தெரியவந்தது. சம்பவம் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருடன் தங்கி இருந்த ஆண் நண்பரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் அவர், “இருவரும் இரவு மது அருந்தினோம். பின்னர் நான் வீட்டிற்கு சென்றுவிட்டேன். மறுநாள் காலை பலமுறை அழைத்தும் போன் எடுக்காததால் நேரில் வந்து பார்த்தபோதுதான் சம்பவம் தெரிய வந்தது” என்று தெரிவித்துள்ளார். போலீசாரின் தொடர் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் ரோஜா போதையில் குளியலறைக்குள் சென்றிருப்பது உறுதியாகியுள்ளது.

 

குளியலறை தண்ணீர் தொட்டியில் இறங்கி குளித்தபோது, போதை காரணமாக மயங்கி விழுந்து எழ முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம், சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதேவி துபாயில் குளியலறை தொட்டியில் உயிரிழந்த சம்பவத்தை நினைவுபடுத்துவதாக கூறப்படுகிறது.

 

ரோஜா திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் பின்னர் விவாகரத்து பெற்றிருந்ததும் தெரியவந்துள்ளது. சென்னையில் தனியாக தங்கி இருந்து வழக்கறிஞராக பயிற்சி பெற்று வந்த அவர், சமூக வலைதளம் மூலம் யஸ்வந்த் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. அந்த நெருக்கத்தின் காரணமாகவே இருவரும் ஓட்டலில் தங்கி இருந்துள்ளனர்.

 

சம்பவம் நடந்த இரவில் ஆண் நண்பர் வெளியே சென்றபின் ரோஜா அறையில் தனியாக இருந்ததாகவும், அதன் பின்னர் ஏற்பட்ட இந்த துயரச்சம்பவம் யாருக்கும் உடனடியாக தெரியாமல் போனதாகவும் கூறப்படுகிறது. மறுநாள் காலை ஆண் நண்பர் ஓட்டல் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்த பிறகே சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

மது அருந்தும் பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் உடல், மனநல பாதிப்புகள் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இளம் வயதிலேயே திறமையான வழக்கறிஞராக உருவெடுக்க முயன்ற பெண் இவ்வாறு உயிரிழந்தது அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம், பாதுகாப்பற்ற சூழலில் அளவுக்கு மீறிய மது அருந்துவதால் ஏற்படும் அபாயங்களை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon