--- --:--:-- --

திருவாடானை அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்: 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்

12

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பாக, கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வகுப்புகளை புறக்கணித்து வாயில் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசிற்கு எதிராக கண்டனமுழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

​போராட்டத்தில் ஈடுபட்ட விரிவுரையாளர்கள் பின்வரும் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்: ​பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நிர்ணயம் செய்தபடி மாத ஊதியமாக ₹57,800 வழங்க வேண்டும்.ஆண்டு முழுவதும் (12 மாதங்கள்) தடையின்றி ஊதியம் வழங்க வேண்டும்.
​அனைத்து விரிவுரையாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி (EPF) பிடித்தம் செய்யப்பட வேண்டும்.​பெண் விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.

 

​ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு ₹25 லட்சம் பணிக்கொடை (Gratuity) வழங்க வேண்டும். ​​உயர்கல்வித்துறை வழிகாட்டுதலின்படி, 1996 முதல் 2025 வரை பல்வேறு காலகட்டங்களில் இப்பணியில் நியமிக்கப்பட்டுள்ள விரிவுரையாளர்கள், தங்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் தற்போது வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

 

​இதன் தொடக்கமாக இன்று கல்லூரி வாயில் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு, கிளைத் தலைவர் பேராசிரியர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் 20-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் கலந்துகொண்டு, தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ​நிறைவாக, கிளைச் செயலாளர் பேராசிரியர் சரவணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Right Menu Icon