தொகுதிப் பங்கீடு பேச்சு – ராகுலை சந்திக்கிறார் கனிமொழி
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. வரும் 1 ஆம் தேதி 9 வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடரை ஏப்ரல் 2 ஆம் தேதி வரை 2 அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வி.பி ஜி ராம் ஜி சட்டம், எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
2 கட்டங்களாக பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்தப்படும் நிலையில், முதற்கட்ட கூட்டத் தொடர் இன்று முதல் வரும் 13-ம் தேதி வரையும், 2-ம் கட்ட தொடர் மார்ச் 9 ஆம் தேதி முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி வரையும் நடத்தப்படுகிறது.
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், 2026 தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெரும். இந்த கூட்டணியில் வி.சி.க அங்கம் வகிக்கும். 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு நாங்கள் உறுதிபட தெரிவித்த நிலைப்பாடு சாதிய, மதவாத அரசியல் கட்சிகளோடு ஒருபோதும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்.
அந்த கட்சியில் இடம்பெறும் கூட்டணியிலும் இருக்க மாட்டோம் என்று அறிவித்தோம். அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேர வேண்டும் என்பது குறித்து தி.மு.க. தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த கட்சியைத்தான் கூட்டணியில் சேர்க்க வேண்டும், இந்த கட்சியை சேர்க்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.விடம் சொல்லாது. எங்களுக்கு எந்த அதிகாரமும், உரிமையும் இல்லை என்றார்.






