ஊத்துக்கோட்டை நகராட்சியாக தரம் உயர்த்த பரீசலனை
ஊத்துகோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக கோரிக்கை அரசின் உயர்மட்ட குழுவின் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், ஊத்துகோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அருகில் உள்ள கிராம பகுதிகளை நகராட்சியுடன் இணைந்து தரம் உயர்த்து தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊத்துகோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்துவது இந்த குழுவின் பரிசீலனையில் உள்ளது.
100 வேலைத் திட்டம் பாதிப்பு ஏற்படும் என்பதால் நன்கு பரிசீலனை செய்யப்பட்டு தான் இந்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.






