குப்பையில் இருந்து மின்சாரம் பெறும் திட்டம்..!
சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகரங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், திருப்பூரிலும் இத்திட்டத்தை தொடங்க அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருப்பூரில் தேங்கி உள்ள குப்பைகள் எப்போது அகற்றப்படும் என உறுப்பினர் விஜயகுமார் கேள்வி எழுப்பபினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகரங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், தேவைப்பட்டால் திருப்பூரிலும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டதை செயல்படுத்த தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், இத்திட்டங்களை செயல்படுத்த இடம் கிடைப்பதில்லை என்றும், மாநகரத்தில் இருந்து 15 கி மீ தள்ளி இடம் கிடைத்தால் கூட போதுமானது என்றும், இடத்தை கண்டறிந்து கொடுத்தால் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.






