--- --:--:-- --

மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு – ஜாய் கிரிசில்டா திடீர் சம்மதம்

3

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், கேட்டரிங் சர்வீஸ் மூலம் பிரபலமானவர். இவர் ‘மெஹந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உண்டு. இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார்.

 

இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் ஜாய் கிரிசில்டா வெளியிட்ட புகார் மற்றும் சமூக வலைதள பதிவுகளால் தங்களது நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாக மாதம்பட்டி ரங்கராஜின் தந்தை நடத்தி வரும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் குற்றச்சாட்டு முன்வைத்தது. ஜாய் கிரிசில்டா பதிவால் ரூ.12 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டதாக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

 

மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் ஜாய் கிரிசில்டா வெளியிட்ட புகார் மற்றும் சமூக வலைதள பதிவுகளால் தங்களது நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாக மாதம்பட்டி ரங்கராஜின் தந்தை நடத்தி வரும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் குற்றச்சாட்டு முன்வைத்தது. ஜாய் கிரிசில்டா பதிவால் ரூ.12 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டதாக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

 

மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்திருந்தது.

 

இந்த வழக்கை, நீதிபதி என். செந்தில்குமார் விசாரித்தார். மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் சார்பில், கிரிசில்டாவின் சமூக வலைதள பதிவுகளால், ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் செப்டம்பர் வரை 11 கோடியே 21 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகியுள்ளது. சமூக வலைதள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும். மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்த தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

 

ரங்கராஜுக்கு எதிரான பதிவுகளில், தேவையில்லாமல், தங்கள் நிறுவனத்தின் பெயரை இணைத்ததால், நிறுவனத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில், மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை இணைத்து பதிவிட்ட பதிவுகளை நீக்கி விடுகிறேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா தரப்பில் உத்தரவாதம் கொடுத்ததால் ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டதற்கு எதிராக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon