--- --:--:-- --

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

3

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் – புதுவை கடலோரப் பகுதிகளில் நேற்று (30.11.2025) நிலவிய டிட்வா புயல் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று (01.12.2025) காலை, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் – வடதமிழகம் – புதுவை – தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு – தென்கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

 

அப்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதிகளிலிருந்து வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 40 கிலோ மீட்டராக இருந்தது. இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு, வடதமிழகம் – புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

 

அப்போது, சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது 30 கிலோ மீட்டராகவும் இருக்கக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

இதனிடையே, இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூருக்கு காலையில் ஆரஞ்ச் அலர்ட் என கூறிய நிலையில், தொடர்ந்து மழை பெய்வதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை முதல் வரும் 7ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாலை 5.40 நிலவரப்படி, 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி டிட்வா புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக, சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (02.12.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

 

அதேபோல திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (2.12.2025) அதிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

நாளை (02.12.2025) செங்கல்பட்டு மாவட்டத்தில் டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதன் காரணமாக, அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவத

Right Menu Icon