திராவிட அரசியலை வீழ்த்துவதே ஆர்.எஸ்.எஸ்-ன் செயல் திட்டம், ஆளுநர் ரவி பேசும் அரசியல் இதுதான் – திருமாவளவன்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “ஆளுநர் ஆர்.என். ரவி பிறப்பதற்கு முன்பே இந்த மண்ணில் பேசப்பட்ட அரசியல் திராவிடம். ஆரியம் அல்லது பார்ப்பனியம் என்ற கருத்துகளுக்கு எதிராக ஆரியர் அல்லாத அல்லது பார்ப்பனர் அல்லாத தலைவர்கள் பேசிய அரசியலைத்தான் இங்கே திராவிட அரசியல் என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதனை விமர்சிப்பது சங்பரிபவர்களின் ஒரு நிலைப்பாடு, திராவிட அரசியலை வீழ்த்துவோம் என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் ஒரு செயல் திட்டம். அது ஆரியர்களுக்கு எதிரானது என்பதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல அம்பேத்கரும் உயர்த்திப் பிடித்திருக்கிறார், அவர் நேரடியாக திராவிடம் என்று பேசாவிட்டாலும் ஆரிய எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு என்பது தான் அம்பேத்கரின் அரசியல். அதைத்தான் நாம் இங்கே திராவிடம் என்று அழைக்கிறோம்.
அதை ஆளுநரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதிலிருந்து அவருடைய சங்கப் பரிவார் அரசியல் வெளிப்படுகிறது” என்று கூறினார்.





