--- --:--:-- --

திருப்பூர் : செல்போனை பறித்து சென்ற நபர் கைது

14

திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூலிபாளையம் பிரிவு அருகே , கார்த்திக்(32) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது தனது செல்போனை ஜெகதீஷ் வயது(27), என்ற நபர் வழிமறித்து பிடிங்கியதாகவும் தெரிகிறது.

அந்த நபரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து காவலரிடம் ஒப்படைத்து, அனுப்பர்பாளையம் காவல் நிலையம்  அளித்தனர். புகாரின் பேரில் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில் செல்போனை பறித்த ஜெகதீஷ்(27) என்ற நபரிடமிருந்து சாம்சங் கைபேசி ஒன்று கைப்பற்றபட்டது.  இதனையடுத்து  அவா் மீது வழக்குப் பதிவு செய்து போலீசாா் கைது செய்தனர்.
Right Menu Icon