தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது..!
திருப்பூர் மாநகர, மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிபாளையம் அருகே 23.11.2025-ம் தேதி சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேற்கண்ட இடத்தில் மத்திய காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது 1.கந்தசாமி(57), 2.சிங்கராஜ்(72) ஆகிய இருவர் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்படி எதிரிகள் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.





